Friday, February 8, 2013

இந்த மனிதர்கள் பரப்புகிற வதந்திகளை பார்த்து சிரிப்பதா அல்லது அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை...இந்த மனிதர்களைப் போல வாழ்க்கையை ஒரு சாக்கடையாக வாழ்ந்துவிட என்னால் ஒரு நாளும் முடியாது...

பாரதி..ஒப்புக்கொள்கிறேன்..நீ தீர்க்கதரிசிதான் ...எவ்வளவு பொருத்தமான வார்த்தைகளை அன்றே சொல்லிவிட்டாய் ....

"தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரைகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? "

Sunday, December 2, 2012

இந்த வாரம் படித்ததில் பிடித்தது
 
 
தெருக்களில் அநாகரீகமாகக் குப்பைகளை வீசுபவனைப் பெருமையாகவும்,அதை அள்ளிச் சுத்தம் செய்பவனைக் கேவலமாகவும் பார்க்கிறது உலகம்.

ஒன்று புரிகிறது.இந்தப் பெற்றோர்கள் சினிமா,பீச்,பார்க் எல்லாம் தாண்டி புத்தகம் என்ற உலகத்துக்குள் பிள்ளைகளை அனுப்பவே இல்லை.

டூ வீலரில் அமர்ந்த்திருக்கும் நெருக்கம் கூறிவிடுகிறது ...காதலர்களா,புதுத் தம்பதியா,பழைய தம்பதியா என்பதை

நன்றி:ஆனந்த விகடன்

Sunday, September 9, 2012

நா.முத்துக்குமார் பாடல் வரிகள்

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே..
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே..
நிஜம் தானே கேளடி, நினைவெல்லாம் நீயடி..
நடமாடும் பூ செடி, நீ என்னை பாரடி..

இது வரை எங்கிருந்தோம்?
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்?
உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா?
இன்னும் என்னை புரியலையா?
நான் சிறிது மகிழ்ந்து சிலிர்க்கும் மனதை நீ கொடுத்தாய்..
நான் நினைத்து நினைத்து ரசிக்கும் கனவை நீ அளித்தாய்.
எங்கேயோ உன்முகம், நான் பார்த்த ஞாபகம்..
எப்போதோ உன்னுடன், நான் வாழ்ந்த ஞாபகம்..

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
என் அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
நிஜம் தானே கேளடி, நினைவெல்லாம் நீயடி..
நடமாடும் பூ செடி, நீ என்னை பாரடி..

உன்னுடன் இருக்கையிலே,
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே..
இதுவரை நானும் பார்த்த நிலவா?
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா?
உன்னுடன் நடக்கயிலே,
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே
நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாச காற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்
நிஜம் தானே கேளடி, நினைவெல்லாம் நீயடி..
நடமாடும் பூ செடி, நீ என்னை பாரடி..

உயிரே என் உயிரே என்னவோ நடக்றதே..
அடடா இந்த நொடி வாழ்வில் இனிகிரதே..
ஒ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே..
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே..
எங்கேயோ உன்முகம், நான் பார்த்த ஞாபகம்..
எப்போதோ உன்னுடன், நான் வாழ்ந்த ஞாபகம்..
பொறுக்கிகளும்,பேமானிகளும்,சுரண்டல் பேர்வழிகளும் வாழ்வாங்கு வாழும் இந்த தேசத்தில்தான் இன்னமும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அலைபேசி,கணினிப் புழக்கம் ஏகத்திற்கும் எகிறிவிட்ட நாட்டில்தான்,இன்னமும வறுமையும்,பசியும்,அவமானமும் துரத்த நமக்குச் சோறு போடும் விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்.ஒரு விவசாயியின் மரணம் என்பது ஒரு நாட்டின் இறையாண்மையின் மரணம் என்பதை இந்தச் சமூகமும்,அதிகார மையங்களும் உணர வேண்டும்!


எழுதியவர்:ராஜி முருகன்
நன்றி:ஆனந்த விகடன்
உன்னைப் பிரிந்த பின்னரும்
நாம் சந்தித்த தேதியையும்
பிரிந்த தேதியையும்
மறக்க முடியவில்லை

இப்போது எந்தத் தேதி
எதற்கு என நினைவில்லை


'என்னை அழை' என
குறுஞ்செய்தி அனுப்புகிறாய்
என்னவென்று அழைக்க ?
அதை மட்டும் என்
தலையில் கட்டிவிட்டாய்


நம்மை யாரும் பிரிக்க முடியாது
என்று பல முறை சொல்வாய்
இன்று நீயே நம்மைப் பிரித்தாய்
யாரும் என்பதில் நீயும் நானும்
சேர்த்தியில்லை என உணர்த்தி.



எழுதியவர்:பேயோன்
நன்றி:ஆனந்த விகடன்

 

Monday, September 3, 2012

படித்ததில் பிடித்தது...

"தற்கொலை செய்துகொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
வாழ்ந்துதான் பாரேன்..”